லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!

நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

மதபோதகர் ஆபிரகாம்

மதபோதகர் ஆபிரகாம் - DPS

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:32 pm IST

நெல்லை மாவட்டம் இழந்தகுளம் பகுதியில் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருச்சபை பங்குதந்தையாக இருந்த ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு விதிக்கப்படும் நான்காவது மரண தண்டனை இதுவாகும்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மத போதகருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (53). மத போதகரான இவர் அப்பகுதியில் ஊழியம் செய்து வந்துள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஊழியம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உள்பட 4 சிறுமிகளை மத போதகர் ஆபிரகாம், பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்களது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, சாட்சிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை இன்று முடிவடைந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, மத போதகர் ஆபிரகாம் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.