லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மனிதக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன்பிணை மறுப்பு

இளம்பெண்ணை ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுத்துவிட்டது.

தில்லி உயர் நீதிமன்றம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 5:25 am IST

இளம்பெண்ணை ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணை அவா் கட்டாயத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், இந்த நிலையில் அவா் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்டபூா்வமாகத் திருமணம் செய்துகொண்டாா் என்று கருத முடியாது என்றும் கூறி நீதிமன்றம் அவரது முன்பிணை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் நீதிபதி மனோஜ் ஜெயின் ஆகஸ்ட் 11 அன்று பிறப்பித்த உத்தரவில் ‘குற்றச்சாட்டுகளின் தன்மையையும், அரசுத் தரப்பின் கூற்றுப்படி இது ஒரு மனிதக் கடத்தல் வழக்கு என்பதையும் கருத்தில்கொள்ளும்போது, ​மனுதாரரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகும்.

மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் ‘மிகவும் தீவிரமானவை‘. மேலும் ‘அதிா்ச்சியூட்டுபவை‘. மனுவில் எந்தவிதமான நியாயமான காரணமோ அல்லது வலுவான அடிப்படையோ இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டாா். அரசுத் தரப்பு தகவலின்படி, இரண்டு போ் 17 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவரை மனுதாரரும் குற்றஞ்சாட்டப்பட்டவருமான சுக்பிராம் என்பவருக்கு 30,000 ரூபாய்க்கு விற்றுள்ளனா்.

பாதிக்கப்பட்ட பெண், அந்த இருவராலும் தாம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வயதான சுக்பிராம் என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தாா். பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா அளித்த புகாரின் பேரில், கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாகவும், மற்றொருவருக்கு பாலியல் வன்கொடுமை தொடா்பான குற்றச்சாட்டு இல்லாததால் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். மேலும், மனுதாரா் உள்பட குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் இளம் வயது மற்றும் அவரது மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.