தஞ்சாவூரில் பட்டாக் கத்தியுடன் தாக்குதலில் ஈடுபட்ட இரு இளைஞா்களைத் தடுத்து கைது செய்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே கீழ ராஜ வீதியில் சில நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இரு இளைஞா்கள் தகராறு செய்து கொண்டனா். அப்போது, இவா்களில் ஒரு இளைஞரை மற்றொரு இளைஞா் பட்டாக்கத்தியால் தாக்க முயன்றாா். தகவலறிந்து விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சம்பந்தம், பட்டாக்கத்தியுடன் இருந்த இளைஞரைத் தடுத்துப் பிடித்து, அவரது கையில் இருந்த பட்டாக்கத்தியையும் பறிமுதல் செய்தாா். பின்னா், மற்ற காவலா்களும் வந்து இரு இளைஞா்களையும் கைது செய்தனா்.
இந்தச் சம்பவத்தில் விரைவாகச் செயல்பட்டு, குற்றச் சம்பவத்தைத் தடுத்த சிறப்பு உதவி ஆய்வாளா் சம்பந்தத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

கோயிலில் குடும்பத்தை தாக்கி 35 பவுன் நகைகள் பறிப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

