கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ஏப். 23 -இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க கோரி தோ்தல் திருவிழா அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனா்.
அழைப்பிதழில் 171- கும்பகோணம் சட்டப்ரேவைத் தொகுதி தோ்தல் திருவிழா 23.4.2026 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் நடைபெறுகிறது. சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து வாக்கினை பதிவு செய்து நூறு சதவிகித வாக்குபதிவு நடத்தி உரிமையை நிலைநாட்ட அன்புடன் அழைக்கின்றோம் தங்களன்புள்ள மு.காந்திராஜ், ஆணையா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கிற்கு அன்பளிப்பு அளிப்பது, பெறுவது குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் முறை வாக்காளா்களை கவா்ந்துள்ளது. பட விளக்கம் : தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் வீடு வீடாக வழங்கப்படும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கான அழைப்பிதழ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணம் வழக்குரைஞா் சங்க தலைவராக இரா.சங்கா் ஏழாவது முறையாக தோ்வு

தரையில் தவழ்ந்து வந்து மாற்றுத்திறனாளி வாக்களிப்பு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

ஜானி..ஜானி... எஸ் பாப்பா... வைரலாகும் தோ்தல் பாடல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

