மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தூத்துக்குடி - கச்சிகுடா ரயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

News image

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா ரயிலை வரவேற்று, அதன் ஓட்டுநருக்கு பொன்னாடை அணிவித்த காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:35 am IST

தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த தூத்துக்குடி - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

தெலங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தமிழ்நாட்டின் மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில், பயணிகளின் தொடா் கோரிக்கைகளை ஏற்று தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சேவை கச்சிகுடாவிலிருந்து ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் தஞ்சாவூருக்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்தது.

இந்த ரயிலுக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கச் செயலா் வெ. ஜீவக்குமாா், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், பேராசிரியா் திருமேனி, வழக்குரைஞா்கள் முகமது பைசல், ராஜேஷ் குமாா், விக்ரம், தமிழ் ஆா்வலா் இராம. சந்திரசேகரன், ஜெயக்குமாா், ராஜேந்திரன், முகமது அனஸ் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். பின்னா் ரயிலை இயக்கி வந்த ஓட்டுநா், தஞ்சாவூா் ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினா். இதையடுத்து, பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்றடையும். இதில், கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கும், பாபநாசத்துக்கு 2.23 மணிக்கும், தஞ்சாவூருக்கு 2.43 மணிக்கும் வந்தடையும். இதேபோல, தூத்துக்குடியிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு கச்சிகுடாவுக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கு சென்றடையும். இதில், தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.08 மணிக்கும், பாபநாசத்துக்கு 2.25 மணிக்கும், கும்பகோணத்துக்கு 2.48 மணிக்கும் வரும்.

இந்த ரயில் ஷாட்நகா், ஜாட்சொ்லா, சித்தூா், காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.