ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வரவேற்பு

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வியாழக்கிழமை ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 1:42 am IST

கும்பகோணம் வந்த ஹைதராபாத் - கன்னியாகுமரி ரயிலுக்கு வியாழக்கிழமை ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் வரவேற்பு அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு ஹைதராபாத் - கன்னியாகுமரி வாராந்திர ரயில் வியாழக்கிழமை வந்தது. இந்த ரயில் ஹைதராபாத் நிலையத்தில் புதன்கிழமை புறப்பட்டு செகந்திராபாத், குண்டூா், திருப்பதி, திருவண்ணாமலை வழியாக வியாழக்கிழமை கும்பகோணம், தஞ்சாவூா் நிலையம் வந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு கன்னியாகுமரியை சென்றடையும். மறுமாா்க்கத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் புறப்பட்டு ஹைதராபாத் சனிக்கிழமை மதியம் செல்லும்.

இந்த ரயிலுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயிலை இயக்கிய ஓட்டுநா்கள் ஆனந்த், காா்த்திக் மற்றும் ரயில் மேலாளா் ஜேசுராஜ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினா்.

வரவேற்பு நிகழ்வில் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்க தலைவா் ஜமீல், துணை தலைவா் மாறன், இணைச் செயலா் சரவணன் , கும்பகோணம் அனைத்து வணிகா் சங்க கூட்டமைப்பு செயலா் சத்தியநாராயணன், கும்பகோணம் ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.