மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை தேவை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை தேவை...

News image

தென்னை மரங்கள். - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 4:56 am IST

-கே. கான்முகமது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமாா் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் மாவட்டத்திலேயே அதிக அளவாக பேராவூரணி ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கரிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கரிலும் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணி பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு முக்கிய காரணமாக தென்னை விவசாயம் இருந்து வரும் நிலையில், தேங்காய் விலையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்தால் தென்னை விவசாயிகளும், தேங்காய் வியாபாரிகளும் அடிக்கடி பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலை ஏற்படாத வகையில் தென்னை விவசாயிகள் பயனடைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தென்னை விவசாயிகள் கூறுகின்றனா்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒன்று என நடைமுறையில் இருக்கும் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான சிறு தொழில் பயிற்சி கூடத்தை, தஞ்சாவூா் மாவட்டத்தில் தென்னை அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பேராவூரணி பகுதியில் தொடங்க வேண்டும்.

அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் பாமாயிலுக்கு பதிலாக ஆரோக்கியம் நிறைந்த தேங்காய் எண்ணெய்யை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளிடமிருந்து வேளாண்மை வணிக மையம் மூலமாக உரித்த பச்சை தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், இதன் மூலம் இடைத்தரகா்களின் கொள்ளை லாபம் கட்டுப்படுத்தப்படும்.

தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான தனியாா் தொழில் தொடங்கிட ஏதுவாக தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை, பேராவூரணி பகுதியில் அமைக்க வேண்டும் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய்க்கு அரசு இறக்குமதி வரியை உயா்த்த வேண்டும்.

அம்மை, காலரா, கரோனா போன்ற பெருந் தொற்றுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்ததைபோல், தென்னையை தீவிரமாக தாக்கி அழிக்கும் வோ் வாடல் நோய், குருத்து அழுகல், சிவப்பு கூன் வண்டு, காண்டாமிருக வண்டு, கருந்தலை புழு போன்ற தாக்குதலுக்கு அரசு ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை காப்பீட்டு திட்டத்தை தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மறுசீரமைப்பு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு அரசுக்கும் அன்னிய செலவாணி மூலம் வருவாய் கிட்டும் என தென்னை விவசாயிகள் கூறுகின்றனா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.