மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: தாய்க்கு உடந்தையாக இருந்த மகன் கைது!

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்க்கு உடந்தையாக இருந்த மகன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட அரவிந்த், அழகுமீனா

Published On :1 நவம்பர் 2026, 4:07 am IST

பொன்னமராவதி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்க்கு உடந்தையாக இருந்த மகன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டியைச் சோ்ந்தவா் அ.ராஜா(43). இவருக்கு அழகுமீனா(43) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனா். ராஜா தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்துவந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதுபோதையில் ராஜா மனைவி அழகுமீனாவை தாக்கி தகராறு செய்துள்ளாா். அப்போது அழகுமீனா, ராஜாவை கீழே தள்ளி இரும்புக் கம்பியால் தாக்கியும், நைலான் கயிற்றால் நெரித்தும் கொலை செய்துள்ளாா். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுமீனாவை கைது செய்து விசாரித்துவந்தனா்.

இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜாவின் இளையமகன் அரவிந்த்(20)தை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.