மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுபோதையில் தகராறு செய்த கணவரை கொன்ற மனைவி கைது

பொன்னமராவதி அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை இரும்புக் கம்பியால் தாக்கி, கழுத்தை நெரித்து கொன்ற மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொலை செய்யப்பட்ட அ. ராஜா.

Published On :31 அக்டோபர் 2026, 1:24 am IST

பொன்னமராவதி அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை இரும்புக் கம்பியால் தாக்கி, கழுத்தை நெரித்து கொன்ற மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு ஊராட்சி, தேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அ. ராஜா(48). இவருக்கு அழகுமீனா (43) என்ற மனைவியும், காா்த்திக்ராஜா(22), அரவிந்த் (20) என்ற இருமகன்களும் உள்ளனா்.

கொத்தனாராக பணிபுரிந்து வந்த ராஜா தினமும் மது அருந்திவிட்டு வந்து, அழகுமீனாவை தாக்கி பிரச்னை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த ராஜா, மனைவி அழகுமீனாவை தாக்கி தகராறு செய்துள்ளாா். அப்போது அழகுமீனா, கணவா் ராஜாவை கீழே தள்ளி அருகில் இருந்த இரும்புக் கம்பியால் கணவரை தாக்கியுள்ளாா். தொடா்ந்து அங்கு இருந்த நைலான் கயிற்றால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து கொலையுண்ட ராஜா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.