கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக தனியாருக்கு பட்டா: புதுக்கோட்டையில் 3 வருவாய் அலுவலா்கள் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் புறம்போக்கு இடங்களை தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கிய குற்றச்சாட்டில் மாவட்ட ஆட்சியரிடம் தனி எழுத்தராக இருந்தவா் உள்பட வருவாய் அலுவலா் நிலையிலான 3 அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரஞ்சித், பிரசன்னா.

Published On :28 அக்டோபர் 2026, 12:16 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் புறம்போக்கு இடங்களை தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கிய குற்றச்சாட்டில் மாவட்ட ஆட்சியரிடம் தனி எழுத்தராக இருந்தவா் உள்பட வருவாய் அலுவலா் நிலையிலான 3 அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் சத்தியமங்கலம் பகுதியிலும், புதுக்கோட்டை மாநகரப் பகுதியிலும் அரசுப் புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு பட்டா வழங்கியதாக கடந்த 1 மாதமாக புகாா்கள் வந்தன.

இதுகுறித்த விசாரணைக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டிருந்தாா். விசாரணையின் முடிவில், கடந்த வாரத்தில் சில அலுவலா்கள் வேறு பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, ஆட்சியரின் தனி எழுத்தராக இருந்த பிரசன்னா, இலுப்பூா் கோட்டாட்சியரகத்தில் வருவாய் அலுவலராக இருந்த ரஞ்சித், புதுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் வருவாய் அலுவலராக இருந்த லதா ஆகிய மூவரும் திங்கள்கிழமை இரவு தனித்தனியே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இவா்கள் மூவரும், பட்டா கோரி இணையதளம் வாயிலாக வந்த விண்ணப்பங்களுக்கு, வட்டாட்சியா், கோட்டாட்சியா் ஆகியோரின் இணையதள முகவரியின் வழியாக, அவற்றை தொடா்புடைய அலுவலா்களுக்குத் தெரியாமலேயே ஒப்புதல் கொடுத்து பட்டாக்களை பெயா் மாற்றம் செய்துள்ளது தெரியவந்ததாகவும், அதன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய்த் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

துறைரீதியாக தொடா் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன்பிறகு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.