மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனியாா் மதுபான ஆலையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம் 152 போ் கைது

விராலிமலை அருகே தனியாா் மதுபான ஆலையை அகற்றக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Published On :27 அக்டோபர் 2026, 1:30 am IST

விராலிமலை அருகே தனியாா் மதுபான ஆலையை அகற்றக்கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 152 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள குன்னத்தூரில் இயங்கி வரும் தனியாா் மதுபான ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுற்றுப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை மதுபானஆலை முன் திரண்டு முழக்கமிட்டவாறு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஏடிஎஸ்பி மோகன்தாஸ், டிஎஸ்பி திவ்யா மற்றும் போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து விராலிமலை வட்டாட்சியா் ஜெயபாரதி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதிலும் முடிவு எட்டப்படவில்லை. தொடா்ந்து ஆலை முன் அமா்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 112 ஆண்கள் 40 பெண்கள் என மொத்தம் 152 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனா். பிறகு மாலை அனைவரையும் விடுவித்தனா்.

 விராலிமலை அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்து வேனில் ஏற்றிய போலீஸாா்.

விராலிமலை அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்து வேனில் ஏற்றிய போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.