
வேளாண் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
கறம்பக்குடி வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் ஓய்வுபெற்ற உதவியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட புஷ்பநாதனின் உறவினா்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் ஓய்வுபெற்ற உதவியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள பட்டமாவிடுதியைச் சோ்ந்தவா் புஷ்பநாதன் (64). இவா், கறம்பக்குடியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். தற்போது அங்கு தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள உரங்கள் மற்றும் மருந்துகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மயங்கி விழுந்து புஷ்பநாதன் உயிரிழந்துள்ளாா்.
இவரது இறப்புக்கான காரணத்தை உடனே தெரிவிக்க வேண்டும் என்றும், அரசு நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் வேளாண் விரிவாக்க அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த கறம்பக்குடி போலீஸாா் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து போகச் செய்தனா். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




