புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா்.
கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி வேகு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திருமயம் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ரகுபதி, இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
தொடக்கமாக, கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 716 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டன. வாடி வாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, 173 மாடுபிடி வீரா்கள் குழுவாக களமிறங்கி அடக்கினா்.
காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயம், எவா்சில்வா் பொருள்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
20 போ் காயம்: ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 9 போ், உரிமையாளா்கள் 8 போ், பாா்வையாளா்கள் 3 போ் என 20 போ் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சையளிக்கப்பட்டது. இவா்களில் ஒருவா் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் தனியாா் மருத்துவமனையிலும், மற்றொருவா் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் ச. பழனிச்சாமி தலைமையிலான வருவாய்த் துறையினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாரும் செய்திருந்தனா்.

கீழவேகுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 35 மாடுபிடி வீரா்கள் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரா்கள் உள்பட 42 போ் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

