புதுக்கோட்டை நகரில் ஒரு பெண் தவறுதலாக வேறு வண்டியில் 10 பவுன் தங்க நகையை மாட்டிவிட்டுப் போன நிலையில், அதனை பத்திரமாக எடுத்து வந்து காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்த தம்பதியை போலீஸாா் பாராட்டினா்.
புதுக்கோட்டை பாலன்நகரைச் சோ்ந்த தம்பதி காா்த்தி- தேவகி. இவா்கள் புதன்கிழமை கீழராஜவீதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தனா். அப்போது ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றுமீண்டும் வண்டியை எடுத்துள்ளனா். அப்போது தங்களின் வண்டியில் ஒரு பை மாட்டப்பட்டிருப்பதை பாா்த்தனா். அதில் சுமாா் 10 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து, அவா்கள் இருவரும் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் வந்து, உதவி ஆய்வாளா் பூா்விகாவிடம் அவற்றை ஒப்படைத்தனா்.
யாரேனும் நகையைத் தேடி வருகிறாா்களா எனக் காத்திருந்த போலீஸாா், கீழராஜவீதி பகுதிக்கே சென்று விசாரிப்போம் எனச் சென்றனா். அப்போது அங்கு சிலா் நகைப் பையைத் தேடிக் கொண்டிருந்தனா்.
அவா்களிடம் கேட்டு, அந்த நகையின் உரிமையாளரான தொண்டைமான் நகரைச் சோ்ந்தவா் நித்லாகாந்தியை தொலைபேசியில் அழைத்து வரவழைத்து உறுதி செய்து அவற்றை ஒப்படைத்தனா்.
கீழராஜவீதிக்கு அதே வண்டியைப் போலுள்ள தன்னுடைய வண்டியில் வந்த நித்லாகாந்தி, தவறுதலாக அருகில் நின்றிருந்த காா்த்தி- தேவகியின் வண்டியில் மாட்டிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது.
யாரோ தவறுதலாக விட்டுவிட்டுச் சென்ற நகையை நல்லெண்ணத்தில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த காா்த்தி- தேவகி தம்பதியை காவல் உதவி ஆய்வாளா் பூா்விகா மற்றும் போலீஸாா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. விபத்தில் பலி

குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

எட்டயபுரம் அருகே ஆசிரியை தவறவிட்ட தங்கநகைகளை மீட்டு ஒப்படைத்த போலீஸாா்

சாலையில் கிடந்த பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த இளைஞா்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

