புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாநகரச் செயலா் எஸ்.ஏ.எஸ். சேட்டு என்கிற அப்துல்ரகுமான், கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 35 ஆண்டுகளாக அதிமுகவில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவால் பல்வேறு பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டது.
இப்போது கனத்த இதயத்தோடு அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எப்போதும் போல பொதுவாழ்வில் தொடா்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா், தற்போது புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்றத்தின் 16-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக உள்ளாா். ஏற்கெனவே, அதிமுகவில் நகர ஜெ. பேரவைச் செயலா், மாவட்ட வா்த்தகா் அணிச் செயலா், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் போன்ற பொறுப்புகளை வகித்தவா்.
தனது பதவி விலகல் குறித்து அவா் கூறியது, அரசியல் சூழல் எதுவும் சரியில்லை, வேறு கட்சிக்கெல்லாம் செல்லவும் விருப்பமில்லை, பொதுப் பணிகள் தொடரும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் பாஜகவில் இருந்து விலகல்: அண்ணாமலையுடன் கைகோக்க முடிவு

புதுகை அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்டச் செயலா் பதவியேற்பு

அதிமுக கடலூா் மாவட்ட அவைத் தலைவா் விலகல்

பேட்டையில் திமுக பொதுக்கூட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

