பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தேள் கடித்து சிறுமி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே தேள் கடித்த சிறுமி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

ரிஸ்வானா.

Updated On :23 மே 2026, 12:02 am IST

கந்தா்வகோட்டை அருகே தேள் கடித்த சிறுமி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே கணபதிபுரத்தை சோ்ந்தவா்கள் செல்லத்துரை- ராஜேஷ்வரி தம்பதி. இவா்களுக்கு மகள் ரிஸ்வானா (10) உள்பட 3 குழந்தைகள். ரிஸ்வானா கணபதிபுரம் அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு விவசாய தோட்டத்துக்கு மகள் ரிஸ்வானாவுடன் செல்லதுரை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, ரிஸ்வானாவை தேள் ஒன்று கொட்டியுள்ளது. உடனடியாக அவரை கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லதுரை அழைத்துச் சென்றாா்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு ரிஸ்வானா வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

தேள் கடித்து இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று உறவினா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.