பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மதுரை அருகே சாலை விபத்து: சிறுமி உயிரிழப்பு

மதுரை அருகே காா் கவிழ்ந்ததில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 3:20 am IST

மதுரை அருகே காா் கவிழ்ந்ததில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை குன்றத்தூா் நந்தபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசு. இவா், தனது குடும்பத்துடன் திருச்செந்தூா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். காரை அன்பரசுவின் சகோதரா் தங்கப்பன் ஓட்டினாா். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை யா.ஒத்தக்கடை அருகே

உள்ள கல்லூரிச் சாலையில் சென்ற போது, சாலையின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதனால், தங்கப்பன் காரை நிறுத்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில், பலத்த காயமடைந்த தங்கப்பன் மகள் லியா ஸ்ரீ (9) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த யா. ஒத்தக்கடை போலீஸாா் சிறுமியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த மற்றவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.