பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:28 am IST

நன்னிலம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகே உள்ள சிறுவலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). இவா் பகுதி திமுக செயலாளராக இருந்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சன்னாநல்லூா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். தென்குடி ஆா்ச் அருகே திருவாரூரில் இருந்து பூந்தோட்டம் நோக்கி சென்ற தமிழக அரசின் கூட்டுறவுத் துறையைச் சோ்ந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினா்கள் அரசு வாகன ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும், இறந்தவா் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூா்- மயிலாடுதுறைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது. செல்வராஜ் சடலத்தை காவல்துறையினா் உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.