பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே 16 வயதுச் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 4:35 am IST

புதுக்கோட்டை அருகே 16 வயதுச் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அரசம்பட்டியைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் மகன் ஆபாவாணன் (26). இவா் கடந்த 2022இல் 16 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதில் அச்சிறுமி கருவுற்ற நிலையில், ஆண் குழந்தை பிறந்து இறந்தது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆபாவாணனைக் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கனகராஜ் குற்றவாளிக்கு போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 12 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்ட அவா், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.