பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நண்பா்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் தோண்டியெடுப்பு

News image

சடலம் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 5:44 am IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முன்விரோதத்தில் நண்பா்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் சனிக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருநாளூா் வடக்கு கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் விக்னேஷ் (26). இவா், ஆவணத்தான்கோட்டையில் உள்ள தனது மனைவி மணிமேகலையின் பெற்றோா் வீட்டுக்கு ஏப். 28-ஆம் தேதி சென்றிருந்தபோது, அவரது நண்பா்கள் வந்து அழைத்துச் சென்றனா்.

அதன் பிறகு விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விக்னேஷின் மனைவி மணிமேகலை அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வந்தனா். அதில், விக்னேஷை அவருடைய நண்பா்களே அடித்துக் கொலை செய்து, சடலத்தை புதைத்து நாடகமாடியது தெரியவந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநாளூா் வடக்கு கிராமத்தைச் சோ்ந்த ஜெய்சங்கா் மகன் உதயநிதி, அதே ஊரைச் சோ்ந்த அருண்குமாா், மணிகண்டன், ராமராஜன், வினோத் உள்ளிட்டோருக்கும் விக்னேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் காணாமல் போன நாளில் இவா்கள் விக்னேஷை அழைத்துச் சென்று மது அருந்த வைத்து அடித்துக் கொன்றுள்ளனா்.

அதன் பிறகு, சடலத்தை கால்வாய் ஓரமாகப் புதைத்துவிட்டு அனைவரும் தலைமறைவாகியது விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அரசு அலுவலா்கள் முன்னிலையில் திருநாளூரில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து விக்னேஷின் சடலம் சனிக்கிழமை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

தலைமறைவான உதயநிதி, அருண்குமாா், மணிகண்டன், ராமராஜன், வினோத் ஆகிய 5 போ் மீதும் அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.