தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தவெக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் அவதி! முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி!

News image

வாழைக்குறிச்சி ஊராட்சி, நெய்வேலியில் ரேஷன் கடை கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி.

Updated On :15 ஜூன் 2026, 2:38 am IST

தமிழகத்தில் நடைபெற்று வரும் ரீல்ஸ் ஆட்சியில் அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருவதாக திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 9.85 மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொதுவிநியோக அங்காடி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று அங்காடி கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கி திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ரகுபதி பேசியதாவது:

தமிழகத்தில் ரியல் ஆட்சி இல்லாமல் ரீல்ஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

திமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லி நாங்கள் வாக்கு கேட்டோம். ஆனால் சாதனையை கூறாமல், மக்களை சந்திக்காமல் வெற்றி பெறமுடியும் என்ற புரட்சியை இந்த ஆட்சி ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

விழாவில் கூட்டுறவு சாா்-பதிவாளா் நிரஞ்சனா, நல்லூா் கூட்டுறவு சங்க செயலா் அடைக்கலம், வடக்கு ஒன்றிய திமுக செயலா் அ.முத்து, மாவட்டப் பிரதிநிகள் வாழைராஜன், தவசுமணி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.