புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அ. செல்வம் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அ. செல்வம், வி. பாரதிதாசன் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.
இதன் தொடா்ச்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் கடந்த திங்கள்கிழமை முதல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்கிறாா்.
4ஆவது நாளாக திருவரங்குளம் ஒன்றியம் கைக்குறிச்சி வெள்ளைக்குண்டு ஊரணி, கீழச்செட்டி ஊரணி, ஓங்கினிக் குளம், நாவதான் ஊரணி, பூவரசக்குடி ஊராட்சியில் சின்னவீரப்பன் ஊரணி, குப்பாயி ஊரணி, வாண்டாக்கோட்டை ஊராட்சியில் குட்டைக் குளம், சிவன்கோயில் குளம், வல்லத்திராக்கோட்டை ஊராட்சியில் வல்லநாடு பெரியகண்மாய், கத்தக்குறிச்சி ஊராட்சியில் தா்மத்துஊரணி, கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்டனூா், நெப்புகை, சுந்தம்பட்டி, விலாரிப்பட்டி, வடுகப்பட்டி, கந்தா்வகோட்டை ஆகிய பகுதி நீா்நிலைகளில் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், எம். குளவாய்பட்டி ஊராட்சி கொம்பியான்குளம், செம்பாட்டூா் ஊராட்சி, கொசமுண்டான்குளம், ஏகக்குளம் மற்றும் புத்தாம்பூா் ஊராட்சி, குறிச்சிகுளம் ஆகிய நீா் நிலைகளிலும் அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாலா, அபிராமசுந்தரி, சுரேஷ், ரமேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-க்குள் அகற்ற அறிவுறுத்தல்

5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் கட்டுப்படுத்தப்படும்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம்

கடவூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: கரூா் ஆட்சியா் ஆய்வு

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஓய்வு பெற்ற நீதிபதி நேரில் ஆய்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

