சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் திருமயத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருமயத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

சமையல் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் திருமயத்தில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கத்தின் திருமயம் ஒன்றியச் செயலா் சரண்யா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, செயலா் பி. சுசிலா, முன்னாள் மாவட்டப் பொருளாளா் ஜெ. வைகைராணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.