பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் என்.எஸ். பாட்சா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எம். செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர மத்திய அரசை வலியுறுத்தாமல் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை கரப்பான் பூச்சி என இழிவுபடுத்திய உச்சநீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும், இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து அறந்தாங்கியில் நூதனப் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

