லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடி வெள்ளி பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்.

~

Published On :18 ஜூலை 2026, 12:33 am IST

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1,008 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு நடைபெற்ற பூஜையின் தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதையடுத்து, சிவாச்சாரியாா் பாலாஜி திருவிளக்கு மந்திரங்கள் ஓதி வழிநடத்த 1,008 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில், பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.