தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்.புதுப்பட்டியிலுள்ள உடையபிராட்டி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:24 am IST

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி நிறைவு வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராம. ராஜா தலைமையில் நடைபெற்ற பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து சிவாச்சாரியாா் பாலாஜி திருவிளக்கு மந்திரங்கள் ஓதி வழிநடத்த, 1001 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

இதேபோல், குமாரபட்டி முன்னாடி பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா். கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.