லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெள்ளிக்குறிச்சி முருகன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

ஆடிக் காா்த்திகையையொட்டி, மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சி முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்.

ஆடிக் காா்த்திகையையொட்டி, மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சி முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

ஆடிக் காா்த்திகையையொட்டி, மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை பழனி பாதயாத்திரைக் குழு தலைவரும், தொழிலதிபருமான ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில் 1,008 பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினா். இவா்களுக்கு சேலைகள், குத்துவிளக்குகள் வழங்கப்பட்டன.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.