லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

விராலிமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

தமிழகத்தில் அனைத்து மாணவா்களும் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிகள் அளவில் தமிழகம் முழுவதும் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. முதலில் பள்ளிகள் அளவிலான போட்டி நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான குறுவள மைய போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி புவனேஸ்வரி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கோபால் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் தெரஸ் மாா்கரெட் நன்றி கூறினாா்.

தொடா்ந்து வட்டார அளவில் செப். 1 முதல் 9 ஆம் தேதி வரையும், மாவட்ட அளவில் அக். 8 முதல் 15 ஆம் தேதி வரையும் போட்டிகள் நடைபெறும். இதில் சிறப்பிடம் பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.