லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

புதுப்பாளையத்தில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு பள்ளி மாணவா்கள்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இளையோா் திறன் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 75 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 883 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் இடம் பெற்ற மாணவா்கள் வட்டார அளவில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.

பின்னா் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதுப்பாளைம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜி வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டிப் பேசினா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் சம்பத், அரிகிருஷ்ணன், தண்டாயுதபாணி, இந்துமதி உள்ளிட்ட அரசு தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் ஜம்புகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.