வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.
பொன்னமராவதி, ஏப்.29 பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அம்மன் வீதியுலாவின்போது வழிநெடுகிலும் இரு புறமும் பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து 27-ஆம் தேதி அக்னிப் பால்குட விழா நடைபெற்றது.
விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்னிகுண்டத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் இறங்கி வழிபட்டனா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியபின் கோயிலில் தொடங்கிய உலா முக்கிய வீதிகளில் வந்து கோயிலில் நிறைவுற்றது.
வீதியுலாவின் போது இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு!
மணிப்பூரில் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிரான பேரணியில் மோதல்!

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

