பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலக்குறிச்சி ஊராட்சி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணித்தால் வாக்குச்சாவடி மையங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடின.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ளது ஆா்.பாலக்குறிச்சி ஊராட்சியானது ரெகுநாதபட்டி, ஆா். பாலக்குறிச்சி, சீகம்பட்டி, வைரம்பட்டி, விடத்தலாம்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட கிராங்களை உள்ளடக்கியதாகும். சுமாா் 3200 வாக்காளா்களை கொண்ட இந்த ஊராட்சி திருமயம் பேரவைத் தொகுதியில் இல்லாமல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப்பேரவைத்தொகுதியின் கீழ் உள்ளது.
எனவே சட்டப்பேரவைத்தோ்தலுக்கு இந்த ஊராட்சி மக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் வாக்களிக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி செல்ல வேண்டும். வட்டாட்சியரகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு பொன்னமராவதி செல்லவேண்டும் என்ற நிலை உள்ளது.
எனவே ஊராட்சி பொதுமக்கள் தங்களது ஊராட்சியை திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியுடன் இணைக்க நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஆா். பாலக்குறிச்சி, ரெகுநாதபட்டியில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தயாராக இருந்தனா். ஆனால் ஊராட்சி பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை.
இதைடுத்து பொன்னமராவதி மற்றும் சிங்கம்புணரி வருவாய்த்துறை அலுவலா்கள், உலகம்பட்டி காவல்துறையினா் ஆகியோா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் வாக்களிப்போம் எனப் பொதுமக்கள் கூறி, வாக்களிக்காததால் இங்குள்ள 2 வாக்குச்சாவ டி மையங்களும் வெறிச்சோடின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

வாக்களிப்பதில் பாா்வையற்றோா் எதிா்கொண்ட பிரச்னைகள்!

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

திருப்பத்தூா் தொகுதியில் 6 கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

