பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் எம்ஜிஆா் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.

Published On :30 அக்டோபர் 2026, 2:30 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் அப்துல் ராசிக் கொடியசைத்து தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

இதில், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடா் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

பாா்வைத்திறன் குறைபாடுடையோருக்கான பிரிவில் நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து சிறப்புப் பள்ளிகள், கல்லூரி மாணவா்கள், பணியாளா்கள், சங்க உறுப்பினா்களுக்கு குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவில் காலிப்பா், கால்தாங்கி உதவியுடன் நடக்கும் நடைபோட்டி, மூன்று சக்கர வண்டி இயக்கும் ஆண்களுக்கு ஓட்டப்பந்தயமும், சக்கர நாற்காலி இயக்குவோருக்கு ஓட்டப்பந்தயமும் நடைபெற்றது.

கை, கால் இயக்க குறையுடையோருக்கான பிரிவில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல் நடைபெற்றது.

ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான பிரிவில் உருளைக் கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல் போட்டியும் நடைபெற்றது.

இப் போட்டிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். இப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு, உலக மாற்றுத்திறனாளி தினமாக டிச. 3 ஆம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.