கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை   கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா்  மு.வீரப்பன்.

செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை   கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா்  மு.வீரப்பன்.

Published On :31 அக்டோபர் 2026, 5:02 am IST

செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 3-ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை சிறப்புடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை தொடங்கிடும் வகையில், மாவட்ட ஆட்சியா் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீ ஓட்டப் பந்தயத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மாவட்ட அளவில் 50 மீ, 100 மீ, 150 மீ ஓட்டப் பந்தயம், நடைபோட்டி, ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான போட்டிகள், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள், அறிவுசாா் குறைபாடு உடையோருக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

மேலும், இந்தப் போட்டிகளில் பங்கேற்க வருகை புரிந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு குடிநீா் வசதி, சிற்றுணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும், இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கிடுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், மாற்றுத்திறனாளி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.