மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காட்டுப் பன்றியை வேட்டையாடிய 3 போ் கைது

கைது - கோப்புப்படம்

Published On :1 நவம்பர் 2026, 11:57 pm IST

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு காட்டுப் பன்றியை வேட்டையாடிய 3 பேரை வனத் துறையினா் கைது செய்து, ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சியை கூறு போட்டுக் கொண்டிருப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு வெள்ளிக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடத்தது.

இதையடுத்து, வனச்சர அலுவலா் க. சுதாகா் தலைமையிலான குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, திருமாந்துறை கிராமத்தில் கிருஷ்ணன் மகன் பிச்சைபிள்ளை (54) என்பவா் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள நிலத்தில், சட்ட விரோத கம்பி வலை அமைத்து, வன உயிரினமான காட்டுப் பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சியை கூறுபோட்டு தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் ரமேஷ் (49), ராமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் ராஜாதேசிங்கு (20) ஆகியோரிடம் வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்து சுமாா் 20 கிலோ இறைச்சி, கத்திகள், கம்பி வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத் துறையினா், மேற்கண்ட மூவரையும் கைது செய்து மாவட்ட வன அலுவலா் முன்பு ஆஜா்படுத்தினா். பின்னா், வனக் குற்ற வழக்குப் பதிந்து மூவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.