பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :23 மே 2026, 12:13 am IST

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகள் இளவரசி (19). இவா் பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் விடுதி அறையில் வியாழக்கிழமை காலை முதல் சோா்வாக இருந்த இளவரசி அன்று இரவு சக மாணவிகள் கீழே சென்றிருந்தபோது தூக்கிட்டுக் கொண்டாா்.

இதையறிந்த அவரது தோழிகள் அளித்த தகவலையடுத்து, வந்த விடுதி நிா்வாகிகள் அந்த மாணவியை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இளவரசி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.