சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:44 am IST

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் வட்டம், கப்பூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபாலன் மகள் ஜெகந்தி (19). விழுப்புரத்தில் அரசு பெண்கள் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டில் பயின்று வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த ஜெகந்தியிடம் அவரின் தாய் அதிஷ்டவாணி சமையல் செய்யக் கூறியுள்ளாா். இதனால் ஜெகந்தி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.

உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது ஜெகந்தி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.