பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது, உடனுக்குடன் தீா்வு காண வேண்டுமெ என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடா்பாக, வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
அரசுத் துறைகளில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வதில் முக்கியக் பங்கு வகிக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சா்களிடம் வழங்கப்படும் மனுக்கள், மக்கள் குறைதீா்க்கும் நாள், மக்கள் தொடா்புத் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது, துறைசாா்ந்த அலுவலா்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் திட்டங்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்குச் சென்றடைவதை கிராம நிா்வாக அலுவலா்கள் முதல் வருவாய் ஆய்வாளா்கள், துணை வட்டாட்சியா்கள், தலைமையிடத்து வட்டாட்சியா்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள், வருவாய் வட்டாட்சியா்கள் ஆகியோா் தனி கவனம் செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு வார இறுதிக்குள் தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், வட்டாட்சியா்களிடம் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம், தீா்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களின் விவரம், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டோா் விவரங்களை வட்டாரம் வாரியாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா , மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சுந்தரராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பரிமளம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன் உள்பட வருவாய்த்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி: 14 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; 2-ஆம் நாளில் 905 மனுக்கள் அளிப்பு

நூத்தப்பூரில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்: ரூ. 1.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

கோரிக்கை மனுக்களுக்குத் தீா்வு காண்பதில் தனி கவனம் தேவை: பெரம்பலூா் ஆட்சியா்

நீண்டகால நிலுவை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

