நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி: 14 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; 2-ஆம் நாளில் 905 மனுக்கள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், 14 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

News image

ஆலத்தூா் வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளித்த பெண்ணுக்கு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுக் கடிதத்தை அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

Updated On :18 ஜூன் 2026, 1:34 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில், 14 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டாட்சியரகத்தில் ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கொளக்காநத்தம் கொட்டரை, சாத்தனூா், சிறுகன்பூா் (கி, மே), வரகுபாடி, காரை (கி, மே), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூா் (மே, கி) ஆகிய கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 183 மனுக்கள் அளித்தனா்.

தொடா்ந்து, கொளக்காநத்தம் குறு வட்டத்துக்குள்பட்ட கிராம கணக்குகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா். பின்னா், 14 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை, பட்டா மாறுதல், திருமண உதவித் தொகைக்கான உத்தரவுக் கடிதங்களை ஆட்சியா் ஷரண்யா அறி வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டாா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பரிமளம், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் ந. பவன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வேப்பந்தட்டையில் 143 மனுக்கள்: வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், பெரியவடகரை, நூத்தப்பூா் (தெ, வ), பில்லங்குளம், கை.களத்தூா் (மே, கி), காரியானூா், பசும்பலூா் (வ, தெ), பாண்டகபாடி, திருவாளந்துறை, அகரம் ஆகிய கிராம பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 143 மனுக்கள் அளித்தனா்.

பெரம்பலூா் வட்டாட்சியரகத்தில் வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூா், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூா் (தெ, வ), அரணாரை (வ, தெ), புதுநடுவலூா், சிறுவாச்சூா், நொச்சியம், கல்பாடி (வ, தெ), அயிலூா் ஆகிய கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 420 மனுக்கள் அளித்தனா்.

குன்னத்தில் 159 மனுக்கள்: குன்னம் வட்டாட்சியரகத்தில் பெரம்பலூா் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுந்தரராமன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில், நன்னை (கி, மே), பெருமத்தூா் (வ, தெ), சிறுமத்தூா், கீழப்புலியூா் (வ, தெ), எழுமூா் (மே, கி), மழவராயநல்லூா், ஆண்டிக்குரும்பலூா், அசூா், சித்தளி (கி, மே), பேரளி (வ, தெ), ஒதியம் ஆகிய கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 159 மனுக்களை அளித்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 905 மனுக்கள் பெறப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.