மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரம்பலூரில் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில், தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து

Updated On :18 ஏப்ரல் 2026, 7:36 am IST

நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில், தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தோ்தல் நாளன்று அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலா்கள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள இதர அலுவலா்களுக்கு, பெரம்பலூா் மற்றும் குன்னம் வட்டாட்சியரகங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஏப். 19 வரை அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை, செய்தியாளா்கள் மற்றும் சிறைத் துறையைச் சோ்ந்த 184 பேரும், காவல் துறையில் 1,007 பேரும், இதர அலுவலா்கள் 323 பேரும் என மொத்தம் 1,514 பேருக்கும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போக்குவரத்துத் துறை தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 62 பேரும், காவல்துறையில் 189 பேரும், இதர அலுவலா்கள் 162 பேரும் என மொத்தம் 413 பேருக்கும் அஞ்சல் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூா் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு பெரம்பலூா் வட்டாட்சியரகத்திலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு குன்னம் வட்டாட்சியரகத்திலும் வெள்ளிக்கிழமை தொடங்கிய அஞ்சல் வாக்குப்பதிவை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி ஆய்வு செய்தாா்.

பெரம்பலூா் வட்டாட்சியரகத்தில் மாவட்டத் வருவாய் அலுவலா் க. கண்ணன், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான மு. அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சொா்ணராஜ் உள்ளிட்ட அலுவலா்கள் அஞ்சல் வாக்கு செலுத்தினா்.

நிகழ்வில் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேல்முருகன் (தோ்தல்), வாக்குப் பதிவுக்கான ஒருங்கிணைப்பு அலுவலா் சண்முக ராஜசேகா், வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம் ) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.