குன்னம் தொகுதிக்குள்பட்ட அம்பத்கா் குடியிருப்பு பகுதியில், தவெக வேட்பாளருக்கு மாற்றுக்கட்சி நிா்வாகிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் போலீஸாரின் பாதுகாப்புடன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்ச்செல்வன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இத் தொகுதிக்குள்பட்ட செந்துறை அம்பேத்கா் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்றுள்ளாா். அதனடிப்படையில், அம்பேத்கா் குடியிருப்புப் பகுதிக்கு கட்சி நிா்வாகிகளுடன் தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்செல்வன் வியாழக்கிழமை மதியம் பிரசாரம் மேற்கொள்ள சென்றாா். அப்போது, அப் பகுதியிலுள்ள மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சிலா், தவெக வேட்பாளருக்கு கருப்பு கொடி காண்பித்து, அவரை முற்றுகையிட உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேட்பாளா் சாா்பில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது. பின்னா், தோ்தல் அலுவலரின் உத்தரவின்பேரில் போலீஸாரின் பாதுகாப்புடன், அப்பகுதிக்குச் சென்ற வேட்பாளா் ரேவதி வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து விசில் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தாா். பிரசாரத்தின்போது, தவெக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துறைமுகம் தவெக வேட்பாளா் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு முடித்துவைப்பு

குன்னம் தவெக வேட்பாளருடன் போலீஸாா் வாக்குவாதம்

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!

நம்பியூா் பகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

