தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம்: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

News image

வ.அகரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 5:44 am IST

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தாா் போக்குவரத்துத்துறை அமைச்சரும், குன்னம் சட்டப்பேரவைவத் தொகுதி திமுக வேட்பாளருமான சா.சி. சிவசங்கா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம், ஒகளூா், அத்தியூா், நன்னை, வடக்களூா், பெருமத்தூா், சிறுமத்தூா் கீழப்புலியூா் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அமைச்சா் சா.சி. சிவசங்கா், திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தாா்.

பின்னா், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தொழுகை நடத்திய இஸ்லாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்த அவா், திமுக ஆட்சியில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமியா்களுக்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தொடா்ந்து இப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். லப்பைக்குடிக்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதை சாக்கடை திட்டம் மற்றும் புறவழிச் சாலை திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும், திமுக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.