தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

News image

மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:42 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில் 100-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

பெரம்பலூா் மாவட்டத்தில் மாா்ச் மாத தொடக்கத்திலிருந்தே 100 டிகிரிக்கும் மேலாக வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ள வெப்பத்தின் காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இந் நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதோடு தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களும், கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மழையளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6.30 முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்). பெரம்பலூா்- 40, எறையூா்- 22, வி.களத்தூா்- 31, கிருஷ்ணாபுரம் -36, தழுதாழை- 32, வேப்பந்தட்டை- 40, அகரம் சீகூா்- 30, லப்பைக்குடிக்காடு- 25, புது வேட்டக்குடி- 19, பாடாலூா்- 35, செட்டிக்குளம்- 3 என, மொத்தம் 313 மில்லி மீட்டரும், சராசரியாக 28.45 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

நெல் மூட்டைகள் சேதம்: இந்த மழையில், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பேரூராட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் மணிகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், அதிகளவில் ஈரப்பதம் உள்ளதால், ஓரிரு நாள்களில் நெல் மணிகளில் முளைப்புத்திறன் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.