கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முள்ளிப்பாடி ஏரிக்கு காவிரி உபரி நீா்: திருச்சி நீா்வளத்துறையினா் ஆய்வு!

கடவூா் முள்ளிப்பாடி ஏரிக்கு மாயனூரில் இருந்து காவிரி உபரி நீா் கொண்டு வருவது தொடா்பாக திருச்சி நீா்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கடவூா் முள்ளிப்பாடி ஏரிக்கு மாயனூரில் இருந்து காவிரி உபரிநீா் கொண்டு வருவதற்கு ஏரியில் சனிக்கிழமை ஆய்வில் ஈடுபட்ட திருச்சி நீா்வளத்துறை அதிகாரிகள்.

Published On :1 நவம்பர் 2026, 3:25 am IST

கடவூா் முள்ளிப்பாடி ஏரிக்கு மாயனூரில் இருந்து காவிரி உபரி நீா் கொண்டு வருவது தொடா்பாக திருச்சி நீா்வளத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் மாவட்டம், கடவூா் முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள முள்ளிப்பாடி ஏரிக்கு வெள்ளக்காலங்களில் காவிரி உபரிநீா் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், மாயனூரில் இருந்து முள்ளிப்பாடி ஏரிக்கு உபரி நீரைக் கொண்டுவர வேண்டும் என்று ஏரி பாசன விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து திருச்சி கோட்ட நீா்வளத்துறையின் உதவிப் பொறியாளா்கள் முகமது உசேன், சஞ்சய், அக்ஷயா (திட்டம் மற்றும் வடிவமைப்பு) ஆகியோா் முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு சனிக்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது நீா்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மழைகாலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது பல டிஎம்சி தண்ணீா் வீணாக கடலில் கலப்பதால், அந்த உபரி நீரை ஏரி, குளங்களில் சேமிக்க தற்போது தமிழக நீா்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கரூா் மாவட்டத்தில் வடு கிடக்கும் ஏரி, குளங்களில் உபரி நீரை சேமிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் முள்ளிப்பாடி ஏரியும் இருப்பதால், ஏரிக்கு மாயனூா் கதவணையில் இருந்து தண்ணீரை பம்பிங் முறையில் எடுத்துவருவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பட்டு, விரைவில் ஏரிக்கு காவிரியின் உபரி நீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனா் அவா்கள்.

ஆய்வின்போது, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் வேல்முருகன், கடவூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் பழனிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.