மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:05 am IST

நொய்யல் அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் ஞாயிற்றுக்கிழமை மோதியதில் ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆவுடையாா்பாறையைச் சோ்ந்த கணேசன் மகன் கவின்ராஜ் (31). வெல்டிங் தொழிலாளி. கவின்ராஜ் ஞாயிற்றுக்கிழமை காலை கரூா் மாவட்டம் நொய்யல் குறுக்குச் சாலையில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்துக்கு தனது உறவினரான ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் சிபின் (27) என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் இருவரும் நொய்யல் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

கவின்ராஜ் இருசக்கர வாகனத்தை ஓட்டினாா். இருசக்கர வாகனம் நொய்யல் ரயில்வே கேட் அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த கவின்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் கிடைத்ததும் வேலாயுதம்பாளையம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று கவின்ராஜின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த சிபினை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.