பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை

உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பட்டாசுக் கடை - கோப்புப்படம்

Published On :25 அக்டோபர் 2026, 4:34 am IST

உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு கடையில் பட்டாசு விற்கப்படும்போது, பட்டாசுகளுக்கு மிக அருகில் இருக்கும் வகையில் மின்சார விளக்குகளை பொருத்தி எரிய செய்யக்கூடாது. பட்டாசுப் பண்டல்களை தரையில் இழுத்து கையாளக்கூடாது.

கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகள் இருப்பில் வைக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்காத பட்டாசு விற்பனை செய்யும் கடைகளின் மீதும், உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் பட்டாசு கடைகளின் மீதும் , உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பட்டாசு வைத்திருக்கும் கடைகளின் மீதும் வெடிமருந்து சட்டம்-1884 மற்றும் வெடிமருந்து விதிகள்-2008 ஆகிய சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.