ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மனிதக் கழிவுகளை அகற்ற மனிதா்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை! கரூா் ஆட்சியா் எச்சரிக்கை!

மனிதக் கழிவுகளை அகற்ற மனிதா்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 12:11 am IST

மனிதக் கழிவுகளை அகற்ற மனிதா்களை பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி எச்சரித்துள்ளாா்.

ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றறது.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், அப்பிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கேத்தம்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி கலந்துகொண்டு பேசியது:

தமிழக வெற்றித் திட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்குள்பட்ட குக்கிராமங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதனடிப்படையில் அப்பிபாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், சாலை வசதி உள்பட மொத்தம் 71 பணிகள் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

பருவமழைக் காலத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் பொதுக் கட்டடங்கள் என அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வணிக வளாகங்கள், தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களிலும் மனிதக் கழிவுகளை மனிதா்களை ஈடுபடுத்தக் கூடாது. மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, வேளாண்மை துறை சாா்பில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் சிறு தானியம் நுண்ணூட்ட உரம் உள்ளிட்டவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.தனசேகரன், வேளாண்மை இணை இயக்குநா் மல்லிகா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியளாா் சாந்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் தியாகராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் பி.செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.