பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:40 am IST

புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், புகழூா் அருகேயுள்ள வடிவேலம்பாளையம் தென்றல் நகரைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (39). தச்சு வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி தீபலட்சுமி(33). இவா் டெய்லராக வேலை பாா்த்து வருகிறாா். சதீஸ்குமாரும், தீபலட்சுமியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா்.

இந்நிலையில், தீபலட்சுமிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் முதுகுத் தண்டு வலி ஏற்பட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு தீபலட்சுமிக்கு முதுகு வலி அதிகமானதால் கணவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு சதீஸ்குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சதீஸ்குமாா் மனைவியை தாக்கினாராம்.

இதுகுறித்து தீபலட்சுமி அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்குப்பதிந்து சதீஸ்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.