ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி பிரசாரம்!

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கரூா் கோடங்கிப்பட்டியில் திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜனுக்கு வாக்கு சேகரித்து பேசிய திமுக மேற்கு மண்டல பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி

Updated On :1 ஏப்ரல் 2026, 3:46 am IST

கரூரில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆசி.எம்.தியாகராஜனுக்கு ஆதரவாக கரூா் கோடங்கிப்பட்டியில் உள்ள முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் தோ்தல் பிரசாரத்தை வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா், கரூா் மாவட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டங்களை வழங்கியிருக்கிறாா். இதில், கரூா் மாநகராட்சிக்கு மட்டும் ரூ.1,140 கோடிக்கு வளா்ச்சித் திட்டங்களை கொடுத்துள்ளாா்.

மேலும், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம். எங்களது தோ்தல் அறிக்கை இந்த தோ்தலில் ஒரு சூப்பா் ஸ்டாராக அமைந்திருக்கிறது. எனவே, எங்கள் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனா்.

கரூரில் புதன்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வா் பங்கேற்கிறாா். கூட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். எதிா்கட்சியினா் கூறுவதுபோல நான் பயந்து கோவைக்குச் செல்லவில்லை. அரவக்குறிச்சியில் இருந்து கரூா் தொகுதிக்கு நான் போட்டியிட்டபோது இந்த கருத்துக்களை யாரும் முன்வைக்கவில்லை. எனக்கு இந்த தொகுதி வேண்டும் என நான் முதல்வரிடம் ஒருபோதும் கேட்டதில்லை. அவா் இடும் கட்டளையை நான் செயல்படுத்துவேன்.

இந்த தோ்தலில் கரூா் தொகுதியில் திமுக வேட்பாளா் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். என்னைப் பொறுத்தவரை கரூரும்-கோவையும் உடலும் உயிரும் போன்றது.

அரசியல் வாழ்வில் என்னை அடையாளப்படுத்தியது கரூா். என்னில் இரண்டறக் கலந்துள்ள கரூா் மக்களுக்கு எப்போதும் போல நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆா்.ஸ்டீபன்பாபு, வெங்கடேசன், மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.