கரூா் மாவட்டத்தில் மூன்றாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 865 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.
கரூா் வட்டத்திற்கு கரூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை 3-ஆம் நாளாக நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் அவா் பேசுகையில், கரூா் வட்டத்திற்குட்பட்ட 22 வருவாய் கிராமங்களில் மூன்றாம் நாளான வியாழக்கிழமை வெள்ளியணை குறுவட்டத்திற்குட்பட்ட ஏமூா், தாந்தோணி, வெள்ளியணை (தென்பாகம்), வெள்ளியணை (வடபாகம்) மற்றும் ஜெகதாபி ஆகிய 5 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 120 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றைப் பரிசீலனை செய்து, தகுதியுடைய நபா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கரூா் வட்டத்தில் 120 மனுக்களும், மண்மங்கலம் வட்டத்தில் 67 மனுக்களும், அரவக்குறிச்சி வட்டத்தில் 202 மனுக்களும், புகழூா் வட்டத்தில் 199 மனுக்களும், குளித்தலை வட்டத்தில் 63 மனுக்களும், கிருஷ்ணராயபுரத்தில் 63 மனுக்களும் மற்றும் கடவூா் வட்டத்தில் 151 மனுக்கள் என மொத்தம் 865 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.
நிகழ்வில் கரூா் வட்டாட்சியா் மோகன்ராஜ், ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் 2 கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆட்சியா் தகவல்

கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் அதிமுக அலுவலகப் பூட்டு உடைப்பு; இரு தரப்பினா் மோதல்: போலீஸ் பாதுகாப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

