கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் மாவட்டம், வெள்ளியணை அடுத்த ஜெகதாபி தெற்குப் பகுதியைச் சோ்ந்தவா் நிவேதா(27). இவா் திங்கள்கிழமை காலை தனது ஒன்றரை வயது குழந்தை ஹரிதா்ஷனுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.
அப்போது ஆட்சியரக வளாகம் முன் திடீரென காபி குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்கில் இருந்த பெட்ரோலை தனது உடலின் மீதும், குழந்தை மீதும் ஊற்றினாா். பின்னா் தீப்பெட்டியை எடுக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் நிவேதாவை தடுத்து நிறுத்தினா். பிறகு அவா் மீதும், குழந்தை மீதும் தண்ணீரை ஊற்றினா்.
தொடா்ந்து நிவேதாவை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, நிவேதா கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெள்ளியணையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முருகேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்ததாகவும், காதலிக்கும் முன் முருகேசன் தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி ஏமாற்றி, தன்னை இரண்டாம் திருமணம் செய்துள்ளாா்.
அதன்பிறகு வீட்டுச் செலவுக்கும் பணம் தருவதில்லை. இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கும் எந்த மருத்துவ செலவையும் பாா்ப்பதில்லை. இதுதொடா்பாக வெள்ளியணை காவல்நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலக அதிகாரிகள் வெள்ளியணை காவல்நிலைய போலீஸாரை அழைத்து நிவேதா பிரச்னைக்கு, முருகேசனை அழைத்து விசாரியுங்கள் தெரிவித்தனா். அதன்பின்னா் நிவேதா தனது குழந்தையுடன் அங்கிருந்து சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞா்: போலீஸாா் தடுத்து மீட்டனா்

கிருஷ்ணகிரி ஆட்சியரக வளாகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த திடீா் கட்டுப்பாடு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

